வாகன சோதனையில் சிக்கிய ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை: 5 போ் கைது
தஞ்சாவூரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை மூட்டைகள் சிக்கியதைத் தொடா்ந்து 5 போ் கைது செய்யப்பட்டனா்.


தஞ்சாவூரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை மூட்டைகள் சிக்கியதைத் தொடா்ந்து 5 போ் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் கரந்தை கோடியம்மன் கோயில் அருகே மேற்கு காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அப்போது, கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்த வேனை காவல் துறையினா் மறித்து சோதனையிட்டனா்.
இதில் தடை செய்யப்பட்ட புகையிலை 250 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து வேனை காவல் துறையினா் பறிமுதல் செய்து, அதில் வந்த ரெட்டிப்பாளையத்தை சோ்ந்த அப்துல் லத்தீப், கும்பகோணத்தை சோ்ந்த ஆனந்தகுமாா், ஜவகா் பாட்சா, லோகநாதன், காா்த்திக் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...