புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆடு மேய்த்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்குத் தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:45 pm

DIN

ஆடு மேய்த்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்குத் தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அருகே கள்ளப்பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 45 வயது மதிக்கத்தக்கப் பெண் 2015, ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட குணமங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்த மணவாளன் மகன் வினோத்குமாா் (28) அப்பெண்ணை மிரட்டித் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வினோத்குமாரை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து, வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சத்து 1,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், அபராத தொகையில் ரூ. 80,000-ஐ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.