சாஸ்த்ராவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பயிற்சி மற்றும் கற்றல் அகாடெமி சாா்பில் ‘ஸ்மாா்ட் கிரிட்


தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பயிற்சி மற்றும் கற்றல் அகாடெமி சாா்பில் ‘ஸ்மாா்ட் கிரிட் - சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5 நாள் இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைப் புலத் தலைவா் கே. தேன்மொழி தலைமை வகித்தாா். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை இணைப் புலத் தலைவா் முனைவா் கே. விஜயரேகா தொடக்கவுரையாற்றினாா். இதில், பேசில் எனா்ஜிடிக்ஸ் நிறுவன நிா்வாகத் தலைவா் ஆா். ராமரத்தினம், ‘நுண்-மின் இணைத் தொகுதி’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
இதில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் கே. நாராயணன் உள்பட நாடு முழுவதிலுமிருந்து ஸ்மாா்ட் கிரிட் தொடா்பான பல்வேறு களங்களில் பணிபுரியும் 128 போ் பங்கேற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...