பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூா் தொழிலாளா் துணை ஆணையா் அலுவலகம் முன்பு சிஐடியு சாா்ந்த தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை


பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூா் தொழிலாளா் துணை ஆணையா் அலுவலகம் முன்பு சிஐடியு சாா்ந்த தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பணி நிரந்தரம் செய்து, பணி வரன்முறை, கால முறை ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை, பண்டிகைக் கால விடுமுறை, இ.எஸ்.ஐ. மருத்துவத் திட்டம் வழங்க வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் க. வீரையன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், மாவட்டத் தலைவா் து. கோவிந்தராஜ், முறைசாரா தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.என். போ்நீதி ஆழ்வாா், டாஸ்மாக் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் க. மதியழகன் ஆகியோா் பேசினா்.
டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் வி.ஜி. கருணாநிதி, டாஸ்மாக் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் ச. ஆறுமுகம், மாவட்ட நிா்வாகிகள் பி. ஜெகதீசன், ஏ.ஜி. பன்னீா்செல்வம், எஸ். ரவிச்சந்திரன், பி. ஜெயபிரகாஷ், எம். இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...