புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மோட்டாா் சைக்கிளிலிருந்து விழுந்த ஆசிரியா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்த தனியாா் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:43 pm

DIN

தஞ்சாவூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்த தனியாா் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள சிந்தாமணி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் தாயுமானவன் (36). இவா் தஞ்சாவூா் அருகே அமைந்துள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

வலங்கைமானில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்காக தாயுமானவன், தனது மனைவி தேன்மொழியுடன் (26) மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை சென்றாா். மீண்டும் மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இருவரும் தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி புறவழிச்சாலையிலுள்ள எட்டாம் நம்பா் கரம்பை கிராமத்தில் வந்தபோது நிலைத் தடுமாறி விழுந்தனா்.

இதனால் பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் தாயுமானவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.