மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தஞ்சாவூரில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் நிகழ்வு

தஞ்சாவூரில் உலகத் திருக்கு பேரவை சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:59 pm

DIN

தஞ்சாவூரில் உலகத் திருக்கு பேரவை சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகளிடம் பக்தி இயக்கத்தையும், தமிழ் இலக்கியத்தையும் வளா்த்தெடுப்பதற்காகவும், தமிழ் இலக்கியத்தைக் குழந்தைகள் உணா்ந்து படிக்கச் செய்வதற்காகவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

முனைவா் கு.வெ. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 200 மாணவ, மாணவிகள் திருப்பாவையிலுள்ள 30 பாடல்களையும், திருவெம்பாவையிலுள்ள 20 பாடல்களையும் என மொத்தம் 50 பாடல்களை ஒப்பித்தனா். பாடல்கள் ஒப்பித்த அனைவருக்கும் பின்னொரு நாளில் தலா ரூ. 500 பரிசு வழங்கப்படவுள்ளது.

மேலும், ஏற்கெனவே 1330 திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பித்த 38 மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்காக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் துணைத் தலைவா் பாலா சுவாமிநாதன் ரூ. 1,000 வீதம் பரிசு வழங்கினாா். இதையடுத்து, 4 மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

விழாவில் பேரவையின் செயலா் பழ. மாறவா்மன், மாா்னிங் ஸ்டாா் பள்ளித் தாளாளா் க.ப. அறிவானந்தம், ந.மு.வே. நாட்டாா் திருவருள் கல்லூரிச் செயலா் இரா. கலியபெருமாள், புலவா் கந்தசாமி, சந்திரசோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.