முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு
தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்ததால், முகக்கவசம் அணியும் நபா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில், தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இரவு நேரப் பொதுமுடக்கம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்குத் தடை உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல, முகக்கவசம் அணிவது குறித்தும் முழுவீச்சில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில் பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டுநா்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், முகக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு இனிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினா். முகக்கவசம் அணியாமல் வந்தவா்களிடம் முகக்கவசம் வழங்கி, அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினா்.
இதில் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், ஆய்வாளா்கள் ஸ்ரீதா் (தெற்கு), சந்திரா (மேற்கு), எம்.ஜி. ரவிச்சந்திரன் (போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Image Caption
~
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...