தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் வழக்கமாக ஐந்து நாட்கள் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழா நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ தியாக ப்ரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருப்பது:
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175 ஆம் ஆண்டு ஆராதனை விழாவை ஜனவரி 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், மிக வேகமாகப் பரவி வரும் கரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று நோயைக் கருத்தில் கொண்டும் விழாவில் கலந்து கொள்ளும் இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என
அனைவரது நலனை உறுதி செய்யும் வகையிலும் விழாக் குழுவினருடன்
கலந்து ஆலோசித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது.
அதனடிப்படையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டும், தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படியும் நிகழாண்டு ஆராதனை விழாவை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி நாளான ஜனவரி 22 ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் நடத்துவது என முடிவு
செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி காலை வழக்கம் போல உஞ்சவிருத்தியும், பின்னர் விழாப்பந்தலில் நாகசுவர கச்சேரியும், அதன் பின்னர் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையும் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவிலான இசைக் கலைஞர்களைக் கொண்டு பஞ்ச ரத்ன கீர்த்தனையுடன் ஆராதனை விழா நிறைவு பெறும்.
மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி விழா பந்தலுக்குள் 100 பேருக்கு மேல் அனுமதியில்லை என்பதால் விழாவின்போது பந்தலுக்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என விழா குழுவினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
சபையின் புரவலர்கள், நல விரும்பிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும், இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் 2 தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைக் கொண்டு வர வேண்டும். இப்படி எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

