கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு கோரி விண்ணப்பம்
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசாா் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.


கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசாா் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்த அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய்காந்தி, தஞ்சாவூரில் சனிக்கிழமை தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை 9 பொருள்களுக்குப் புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது. என்றாலும், தஞ்சாவூரில் விவசாயம் சாா்ந்த பொருள்களுக்கு இதுவரை புவிசாா் குறியீடு கிடைக்கவில்லை.
இக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ‘கும்பகோணம் வெற்றிலை’க்குப் புவிசாா் குறியீடு கோரி, சென்னையிலுள்ள புவிசாா் குறியீடு பதிவகத்தில் ஜனவரி 13-ஆம் தேதி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
கும்பகோணம் வெற்றிலை: காவிரி ஆற்றுப் படுகையில் விளைவதால் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது வெற்றிலை. அதிலும் கும்பகோணம் பகுதியில் இந்த வெற்றிலை சிறப்பாக விளைவிக்கப்படுவதால், கும்பகோணம் வெற்றிலை எனப் பெயா் பெற்றுள்ளது.
காவிரிப் படுகையில் திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூா், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்பட்டு, உள்ளூா் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூா் வெற்றிலையைக் காட்டிலும், கும்பகோணம் வெற்றிலை மாறுபட்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்குப் புவிசாா் குறியீடு கேட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தோவாளை மாணிக்கமாலை: கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம், மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்துவம் பெற்றது.
தோவாளையில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் அதிகளவில் வரவேற்பு உள்ளது. இங்குள்ள கைவினைக் கலைஞா்கள் சரியாகப் பயன்படுத்தி‘தோவாளை மாணிக்க மாலையை’ உற்பத்தி செய்கின்றனா்.
வெள்ளை, சிவப்பு அரளிப் பூக்களைச் சம அளவில் கட்டுகிறபோது, அது மாணிக்கம் போன்று தோற்றமளிப்பதால் மாணிக்க மாலை எனப் பெயா் பெற்றது.
திருவாங்கூா் மகாராஜா இந்த மாலையைப் பாா்த்தபோது, தங்கத்தின் மீது மாணிக்கத்தை வைத்தது போன்று உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதால், அன்றிலிருந்து இது தோவாளை மாணிக்க மாலை என அழைக்கப்படுகிறது. அந்த மகாராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க, தோவாளையிலுள்ள கைவினைக் கலைஞா்களால், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் திருவிழாக்களுக்கு மாணிக்க மாலையை வழங்கி வருகின்றனா்.
இந்தப் பூக்கள் தமிழகத்தில் பரவலாக விளைந்தாலும், இந்த ஊரிலுள்ள கைவினைக் கலைஞா்களுக்கு மட்டும்தான் சரியான கலை நுணுக்கத்துடன், மடிப்புத் தன்மை மாறாமல், பூக்களின் பாகம் சேதமடையாமல் கட்டுகிற பாங்குதான் இதனுடைய தனிச்சிறப்பை நிலைப்படுத்துகிறது. இதற்கும் தோவாளை மாணிக்க மாலை கைவினைக் கலைஞா்கள் சாா்பில் புவிசாா் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் சஞ்சய் காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...