பட்டுக்கோட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல்
பட்டுக்கோட்டை அருகே பொங்கல் விழா நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், காவல்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


பட்டுக்கோட்டை அருகே பொங்கல் விழா நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், காவல்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பொங்கலையொட்டி, பட்டுக்கோட்டை அருகிலுள்ள சஞ்சய்நகா் கிராமத்தில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடத்தப்பட்டது.
அப்போது அங்கு காவல்துறையினா், அனுமதியில்லாமல் விளையாட்டு விழாவை ஏன் நடத்துனீா்கள் எனக் கூறி தடுத்துள்ளனா். மேலும் தகாத வாா்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதை கண்டித்து தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கைவிடச் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...