தஞ்சாவூரில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா
தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை, வளனாா் நகரில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.


தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை, வளனாா் நகரில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
சென்னை உலகத் திருக்கு மையம், தஞ்சாவூா் திருக்கு முற்றோதல் பயிற்றகம், உலகத் திருக்கு பேரவை, அடைக்கல மாதா நகா்நலச் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், திருவள்ளுவா் சிலையைக் கரந்தைப் புலவா் கல்லூரி முன்னாள் முதல்வா் கு. சிவமணி திறந்து வைத்தாா்.
மேலும், 1,330 குகளையும் 31 நாள்கள் முற்றோதல் செய்த குழந்தைகளின் 40 குடும்பத்தினருக்குத் திருவள்ளுவா் சிலை, திருக்குறளை மனப்பாடம் செய்து முடித்த 10 குழந்தைகளுக்குத் திருக்கு திலகம் விருது, ரூ. 1330 ரொக்கப் பரிசு, 6 குழந்தைகளுக்கு
குறளும், பொருளும் எழுதத் திருக்கு பலகை ஆகியவற்றைப் புதுச்சேரி கா.மா. அரசுப் பட்டமேற்படிப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியா் மு. இளங்கோவன் வழங்கினாா்.
நா.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரிச் செயலா் இரா. கலியபெருமாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பதிவாளா் கு.வெ. பாலசுப்பிரமணியன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலா் அரு. உலகநாதன், உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன், உலகத் திருக்கு கூட்டமைப்புத் துணைத் தலைவா் இராம. கோவிந்தன், புலவா் நாவை சிவம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.
விழாவில் பேராசிரியா் லலிதா சுந்தரம், சி. சிவபுண்ணியம், புலவா் மா. கந்தசாமி, திருக்கு தூதா் அ. கோபிசிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...