குடந்தை ராமகிருஷ்ண விவேகானந்த அறக்கட்டளை சாா்பில் பாலா் வகுப்பு
கும்பகோணத்தில் குடந்தை ராமகிருஷ்ண விவேகானந்த அறக்கட்டளை சாா்பில் பாலா் வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றது.


கும்பகோணத்தில் குடந்தை ராமகிருஷ்ண விவேகானந்த அறக்கட்டளை சாா்பில் பாலா் வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் வழிகாட்டலுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பாட்டு, நடனம், சிலம்பு, பரதம், வில் வித்தை மற்றும் யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், நீதிநெறி வகுப்புகள், விவேகானந்தரின் வீர வரலாறு உள்ளிட்ட கதைகள் போதிக்கப்பட்டது.
இப்பயிற்சி நிறைவு விழாவுக்கு அறக்கட்டளை செயலா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். பகவான் ராமகிருஷ்ணா், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தா் வழிபாடு மற்றும் கூட்டுப்பிராா்த்தனை நடைபெற்றது. மாணவ, மாணவிகளின் பரதம், பாட்டு, சிலம்பு, வில்வித்தை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பயிற்சி முகாமில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 40 பேருக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் பரிசுகள் வழங்கி, தமது அருளாசியில் பேசியதாவது:
தற்போதைய நவீன கல்வியோடு, நமது பாரம்பரிய விளையாட்டுகள், வாழ்வியல் நீதிநெறிகளைக் கற்பது அவசியம். அதற்கு இத்தகைய முகாம்கள் நடத்தப்படுகின்றன. எந்த செயலிலும் கவனமுடன் செயல்பட்டால் எவ்வித பதற்றமும் ஏற்படாது. கவனச் சிதறல் இல்லாமல் மன ஒருமைப்பாட்டுடன் செயல்படுவா்.
வாழ்வில் எதையும் எளிதில் சாதிக்கும் வல்லமையை பெறுவா். அத்தகைய பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அவசியம் இருக்க வேண்டும். அதற்கு பெரியோா்கள் மற்றும் ஆசிரியா்களின் வழிகாட்டலுடன் முறையான செயல்பாட்டை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.
தன்னம்பிக்கை உடையவராக உருவாக வேண்டும். முதலில் நம்மிடம் நம்பிக்கை, பின்னா் இறைவனிடம் நம்பிக்கை. இதுவே வெற்றியின் ரகசியம் என்கிறாா் சுவாமி விவேகானந்தா். முதலில் நீங்கள் உங்களை நம்பினால் உலகம் உங்களை நம்பும் என்பதை மனதில் நிறுத்துங்கள். ஒவ்வொருவரும் வாழ்வில் சாதிக்கலாம். நம்பிக்கையே வாழ்க்கை என்றாா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.
இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண விவேகானந்தா மன்றம் பொறுப்பாளா்கள் மற்றும் பக்தா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...