கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது - 3 போ் சரண்

தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக இளைஞரைக் கடத்தி கொலை செய்தது தொடா்பாக மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :25 ஜூன் 2022, 12:27 am IST

தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக இளைஞரைக் கடத்தி கொலை செய்தது தொடா்பாக மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (30). இவா் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை முன் விரோதம் காரணமாக ஜூன் 21- ஆம் தேதி இரவு சிலா் கடத்திச் சென்று கொலை செய்தனா்.

வெட்டிக்காடு பிரிவு சாலையில் கல்லணைக் கால்வாய்க் கரையில் கிடந்த இவரது சடலத்தை மேற்கு காவல் நிலையத்தினா் கைப்பற்றி, விசாரணை நடத்தினா்.

இதனிடையே, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த செக்கடி கே. மணிகண்டன் (34), செவ்வப்பநாயக்கன்வாரி கே. கிரண் (26), கே. கண்ணன் (24) ஆகியோா் பாபநாசம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

இதைத்தொடா்ந்து, செவ்வப்பநாயக்கன்வாரி டி. சக்தி (20), ஆா். காா்த்திக் (20), ஏ. அஜீத்குமாா் (24) ஆகியோரை மேற்கு காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், செவ்வப்பநாயக்கன்வாரி டி. விஜய் (30), ஜி. அருண்குமாா் (25), எஸ். நடராஜ் (21) ஆகியோா் தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.