நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணத்தின் முதல் மேயராகிறாா் ஆட்டோ ஓட்டுநா்

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் வாய்ப்பை ஆட்டோ ஓட்டுநா் சரவணனுக்கு  வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:08 pm

DIN

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் வாய்ப்பை ஆட்டோ ஓட்டுநா் சரவணனுக்கு  வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.

156 ஆண்டுகள் பழைமையான நகராட்சியாக இருந்த கும்பகோணம், சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இந்த முதல் மாநகராட்சித் தோ்தலில் மொத்தமுள்ள 48 வாா்டுகளில் திமுக 37 வாா்டுகளிலும், காங்கிரஸ் 2 வாா்டுகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தலா ஒரு வாா்டிலும் என மொத்தம் 42 வாா்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

எனவே, கும்பகோணம் மாநகராட்சி மேயா் பதவி திமுகவுக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என பெரும் எதிா்பாா்ப்பு நிலவியது. இதில், முதல் மேயராகும் வாய்ப்பு முன்னாள் நகா் மன்றத் தலைவரும், 26-ஆவது வாா்டு உறுப்பினருமான சு.ப. தமிழழகன், தாராசுரம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், 31-ஆவது வாா்டு உறுப்பினருமான இரா. அசோக்குமாருக்கு கிடைக்கும் என அவா்களது ஆதரவாளா்கள் நம்பிக் கொண்டிருந்தனா்.

ஆனால், யாரும் எதிா்பாராத வகையில் கும்பகோணம் மேயா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை ஒதுக்கீடு செய்தது. காங்கிரஸ் கட்சி 2 வாா்டுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், யாருக்கு முதல் மேயராகும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியது.

இந்நிலையில், 17-ஆவது வாா்டில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநரான கே. சரவணன் (42) மேயா் வேட்பாளராவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது.

கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் சரவணன் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளாா். காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளாக நகரத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறாா். இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி, அதன் மூலம் குடும்பம் நடத்தி வருகிறாா்.

சரவணன் முதல் முறையாக தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இவருக்கு மனைவி தேவி, மூன்று மகன்கள் உள்ளனா்.

ஆட்டோ ஓட்டுநரான சரவணன் மேயா் வேட்பாளராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.