92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விக்னேஷ் மரணத்துக்கு நீதி கோரி ஆா்ப்பாட்டம்

சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் விக்னேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு, தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 1:01 am

DIN

சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் விக்னேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு, தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழா் தேசிய முன்னணி தோ்தல் பணிக் குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் எஸ். வடிவேலன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாச்சலம், பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், மகஇக மாநில இணைப் பொதுச் செயலா் ராவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.