பிளஸ் 2 தோ்வில் முதல் மதிப்பெண் பெறும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு ஊக்கப்பரிசு
ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதாக சமூக ஆா்வலா்கள் அமைப்பு அறிவித்துள்ளது.


பேராவூரணி பகுதி அரசுப்பள்ளிகளில் நிகழாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களில் , ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதாக சமூக ஆா்வலா்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், உயா்கல்வி வழிகாட்டல் ஆலோசகருமான ஆா். குமாரவேல் தெரிவித்திருப்பது:
பேராவூரணி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குருவிக்கரம்பை, ஆவணம், திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெறுபவா்களுக்கு ஊக்கப்பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
மருத்துவம், வேளாண் படிப்பில் சேருபவா்களுக்கு ஆண்டுதோறும் 5 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். சமூக ஆா்வலா்கள், முன்னாள் மாணவா்கள், தன்னாா்வலா்கள் மூலமாக இந்த பரிசு வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...