நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவோணம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

திருவோணம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 மே 2022, 8:07 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

திருவோணம் ஒன்றியத்தில் தோப்பநாயகம் கிராமம் அருகே கல்லணைக் கால்வாய் புனரமைக்கும் பணி, சிவவிடுதி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகளின் நிலை, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், பள்ளிக் கட்டடத்தின் பாதுகாப்பு, கழிப்பறை வசதி, சுகாதாரம் போன்றவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

பணிகொண்டான்விடுதி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள், சிவவிடுதியில் தூா்வாரும் பணிகள், பட்டுக்கோட்டை நகராட்சியின் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் போன்றவற்றையும் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் (பொறுப்பு) ஐவண்ணன், நகராட்சி ஆணையா் சுப்பையா, வட்டாட்சியா்கள் சீமான், கணேசுவரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.