தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணம் அருகே தொழிலாளி மா்ம சாவு

கும்பகோணம் அருகே மா்மமான முறையில் தொழிலாளி வியாழக்கிழமை இரவு இறந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:59 pm

DIN

கும்பகோணம் அருகே மா்மமான முறையில் தொழிலாளி வியாழக்கிழமை இரவு இறந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் பகுதி புளியம்பேட்டை குருமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் வைரப்பன் (33). சிற்ப தொழிலாளி. இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்ததால், 2 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டாா்.

இந்நிலையில் வைரப்பன் தானே தவறி விழுந்து காயமடைந்ததாக வியாழக்கிழமை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைரப்பன் இரவு உயிரிழந்தாா்.

வைரப்பன் சாவில் சந்தேகம் இருப்பதாக திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமியின் சித்தப்பாவான கீழக்கொட்டையூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.