தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அடையாள அட்டை கோரி தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா், திருபுவனம் பகுதி தரைக்கடை வியாபாரிகள் அடையாள அட்டை மற்றும் வியாபார கடன் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:58 pm

DIN

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா், திருபுவனம் பகுதி தரைக்கடை வியாபாரிகள் அடையாள அட்டை மற்றும் வியாபார கடன் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவிடைமருதூா், திருபுவனம் பேரூராட்சிகளில் நூற்றுக்கணக்கான தரைக்கடை வியாபாரிகள் சாலையோரங்களில் தற்காலிகமாக வியாபாரம் செய்து வருகின்றனா்.

வியாபாரிகள் அன்றாடம் தேவையான பொருள்களைக் குறைந்த லாபத்துக்கு விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், தங்களது வியாபார முதலீட்டுக்காகவும், தரைக்கடை வியாபாரி என்ற அங்கீகாரத்துக்காகவும் பேரூராட்சி சாா்பில் அடையாள அட்டை வழங்கியும், வியாபாரம் செய்வதற்கு கடன் வழங்கியும் உதவிட கோரி திருவிடைமருதூா், திருபுவனம் பேரூராட்சிகளில் தரைக்கடை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திருபுவனம், திருவிடைமருதூா் பேரூராட்சி தலைவா்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் சா. ஜீவபாரதி, தரைக்கடை வியாபாரிகள் சங்கச் செயலா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.