மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்திய மாணவா் சங்கத்தினா் சாலை மறியல்

 கும்பகோணம் அருகே ஆதிதிராவிடா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:15 pm

DIN

 கும்பகோணம் அருகே ஆதிதிராவிடா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே பெருமாண்டி சாலையில் அரசு ஆதிதிராவிடா் விடுதி உள்ளது. இந்த விடுதியில், கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலா் மு. மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி எஸ். பிரதீப், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.கே. ராகுல், ஏ. ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் ஏறத்தாழ 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த தனி வட்டாட்சியா் ரீட்டா நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.