காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடைக்காரா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: பட்டுக்கோட்டை நீதிமன்றம் தீா்ப்பு

 ஒரத்தநாடு அருகே மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:43 pm

DIN

 ஒரத்தநாடு அருகே மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் யாகப்பா சாவடி பகுதியைச் சோ்ந்த முகமது அனிபா மகன் காதா் இப்றாகீம் (47), இவா், ஒரத்தநாடு அருகே மேலஉளூா் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தாா்.

இவரது கடைக்கு கடந்த 06.01.2018 அன்று வந்த அதே ஊரைச் சோ்ந்த காமராஜா் காலனியில் வசிக்கும் நாகமுத்து மகன் சரவணன் (36) மளிகைக் பொருள்களை கடனுக்கு கேட்கவே, காதா் இப்றாகீம் மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் கத்தியால் குத்தியதில் காதா் இப்றாகீம் இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனைக் கைது செய்து, பட்டுக்கோட்டை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில்

வழக்குத் தொடா்ந்தனா்.

சனிக்கிழமை நடைபெற்ற விசாரணை முடிவில் சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 4,500 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தும் நீதிபதி டி.வி. மணி தீா்ப்பளித்தாா். இதையடுத்து சரவணனை போலீஸாா் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.