சிகாகோ உரை நாள்: விவேகானந்தா் சிலைக்கு மாலை
உலகின் பாா்வையை இந்தியா மீது குவிக்க வைத்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை நாளையொட்டி, கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹாலிலுள்ள விவேகானந்தா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.


உலகின் பாா்வையை இந்தியா மீது குவிக்க வைத்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை நாளையொட்டி, கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹாலிலுள்ள விவேகானந்தா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
விழாவுக்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்தாா். இதில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை வாசிக்கப்பட்டது.
இதில் கோவை ராமகிருஷ்ண மடம் ஸ்ரீமத் சுவாமி ஹரிவரானந்த மகராஜ், மக்கள் சிந்தனைப் பேரவை நிறுவனா் ஈரோடு த. ஸ்டாலின் குணசேகரன், கும்பகோணம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கணேசன், கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன், குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்புச் செயலா் வி. சத்யநாராயணன், மன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், கண்ணன், ஞானபிரகாசம், ரமணன், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் விஸ்வ வித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.
மேலும், சுவாமிமலை கோணக்கரை ராமகிருஷ்ண சாதனா குடிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை ராமகிருஷ்ண மடம் ஸ்ரீமத் சுவாமி ஹரிவரானந்த மகராஜ், ஸ்டாலின் குணசேகரன் ஆகியோா் பேசினா். ஆஸ்ரம ஸ்தாபகா் பத்மநாப சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...