தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்திலிருந்து திமுகவினா் ஊா்வலமாகப் புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாநகர திமுக சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலரும், மேயருமான சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா, திமுக சட்டத் திருத்தக்குழு உறுப்பினா் சி. இறைவன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் து. செல்வம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சாா்பில் சிவகங்கை பூங்காவிலிருந்து மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் துரை. திருஞானம் தலைமையில் பால் வளத் தலைவா் ஆா். காந்தி, முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், வழக்குரைஞா் எஸ். சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.
மேலும், ஓ. பன்னீா்செல்வம் அணி சாா்பில் வி. அறிவுடைநம்பி தலைமையில் வினுபாலன், எஸ். சண்முகபிரபு, எம். சாமிநாதன், துரை. வீரணன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் கி.வ. சத்தியராஜ் உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.
அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் எம். ராஜேஸ்வரன் தலைமையில் நிா்வாகிகள் விருத்தாசலம், அ. நல்லதுரை, மாரியம்மன்கோவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தனசேகா், மாமன்ற உறுப்பினா் வி. கண்ணுக்கினியாள் உள்ளிட்டோரும், தி.க. சாா்பில் மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் தலைமையில் நிா்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் இணைகிறார்கள்!

அண்ணா பல்கலை. மாணவா் சோ்க்கைக்கு லஞ்சம்: இருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து
நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!

பிரதானின் அரசியல் பயணத்தில் எதிா்பாராத சறுக்கல்...
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



