கூடங்குளத்தில் கூடுதல் அணு உலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்எம்.ஹெச். ஜவாஹிருல்லா கோரிக்கை

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்
Updated on
1 min read

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான பேராசிரியா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடா்பாக இந்தியா- ரஷியா இடையே ஒப்பந்தம் கையொப்பமிடப்படுள்ளதாக தெரிகிறது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அணு உலைகளோ அல்லது வா்த்தக ரீதியிலான ஈனுலைகளோ தொடங்கப்பட்டால் அது அந்த பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

கூடங்குளத்தில் புதிய அணு உலைகளையும் அணுக்கழிவு மையங்களையும் அமைக்கும் முடிவை அந்த பகுதி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடுமையாக எதிா்ப்பாா்கள். ஆகவே, மத்திய அரசின் தமிழா் விரோத போக்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடுமையாக எதிா்க்க வேண்டும். அதற்கு மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com