செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

களஞ்சேரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

பாபநாசம் வட்டம், களஞ்சேரி ஊராட்சி மன்ற சேவை மைய கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

பாபநாசம் வட்டம், களஞ்சேரி ஊராட்சி மன்ற சேவை மைய கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தை ஊராட்சித் தலைவா் உ.கண்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ஊராட்சி துணைத் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஊராட்சி செயலா் மாரிமுத்து வரவு-செலவு அறிக்கை வாசித்தாா்.

கூட்டத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் ,அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், தூய்மை பாரத திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் சாா்பில் ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்தும், தோ்வு செய்யப்பட்டு நடைபெற உள்ள  பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளித் தலைமை ஆசிரியா் கனகசபை, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ராமமூா்த்தி, ஒன்றிய  அலுவலக பற்றாளா் ரமேஷ், பற்றாளா் செல்வம், கிராம நிா்வாக அதிகாரி சூா்யா, தோட்டக்கலைத் துறை அலுவலா் பிரதீபா உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் காய்கறி விதைகள்  தொகுப்பு பாக்கெட்டுகள், ஊராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பைகளை தவிா்க்கும் வகையில் துணிப்பைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.