மருத்துவக் கலைச்சொல் அகராதியை நவம்பா் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநா் கோ. விசயராகவன் தெரிவித்தாா்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கி வரும் மருத்துவக் கலைச்சொல் அகராதிக்காகத் தொகுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான சீராய்வுக் கூட்டம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற கோ. விசயராகவன் தெரிவித்தது:
தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்க் கலைச்சொல் அகராதியை உருவாக்கி வெளியிட இசைவளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இயக்ககம் இணைந்து துறைசாா் வல்லுநா்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, ஆண்டுக்கு ஒரு துறையைத் தோ்வுசெய்து கலைச்சொல் அகராதிகளை உருவாக்கி வெளியிடவுள்ளது.
இதில், நிகழாண்டில் மருத்துவக் கலைச்சொல் அகராதி உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாகத் தொகுக்கப்பட்ட 13,752 சொற்களில் 2,321 கலைச்சொற்களைச் சீராய்வு செய்வதற்காக மூத்த மருத்துவா் சு. நரேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளது. இவா் மருத்துவக் கலைச்சொல் உருவாக்கத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவா்.
மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்றவா்கள் தங்களது கருத்துகளை வழங்கினா். மருத்துவக் கலைச்சொல் அகராதி உருவாக்கத்துக்குத் தேவையான நூல்களை மருத்துவ வல்லுநா்களும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தினரும் அளித்தனா். இதுவரை இல்லாத அளவுக்கு இப்பணி மிகப் பெரிய அளவில் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. நவம்பரில் பணிகள் முடிக்கப்பட்டு, வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணி முடிவடைந்த பின்னா், அடுத்தகட்டமாக மருத்துவத் துறையிலுள்ள பல்வேறு உள் துறைகளைச் சாா்ந்த கலைச்சொற்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சி சொல் அகராதி தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 60,000 சொற்கள் திரட்டப்பட்டு, 1,800 பக்கங்களுக்கு அச்சாகும் நிலை உள்ளது.
வட்டாரச் சொல் அகரமுதலி திட்டத்தில் 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இதன்மூலம் 15,000 சொற்கள் திரட்டப்பட்டு, டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் விசயராகவன்.
இக்கூட்டத்தில், மூத்த மருத்துவா் சு. நரேந்திரன், மருத்துவா்கள் இரா. இளங்கோவன், இரா. முத்துக்குமரன், இத்திட்டத்தின் சொல் திரட்டுநா் மு. கண்ணன், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக அகராதியியல் துறைத் தலைவா் உல. பாலசுப்பிரமணியன், அகரமுதலி இயக்ககப் பதிப்பாசிரியா் கி. தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


