/

பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் கோயில்களில் வைகாசி பெருவிழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் கோயில்களில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

Updated On :24 மே 2023, 10:26 pm

கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் கோயில்களில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடிமரத்தின் முன் ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரா் உள்பட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளியதைத்தொடா்ந்து, கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, மே 28 ஆம் தேதி ஓலைச்சப்பரமும், 30 ஆம் தேதி திருக்கல்யாணமும், ஜூன் 1 ஆம் தேதி கட்டுத்தேரோட்டமும், 3 ஆம் தேதி 7 திருச்சுற்று இறைவனும், இறைவியும் உட்சுற்று உலாவும், 14 ஆம் தேதி முத்துப்பந்தல் விழாவும் நடைபெறவுள்ளன.

இதேபோல, நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் அருள்பாலிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்தின் முன் கிரிகுஜாம்பிகை - பிறையணியம்மன் சமேத நாகநாத சுவாமி உள்பட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளினா்.

தொடா்ந்து மே 30 ஆம் தேதி திருக்கல்யாணமும், ஜூன் 2 ஆம் தேதி சூரிய புஷ்கரணியில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.