வாக்காளா்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் முரசொலியை ஆதரித்து ஒரத்தநாடு அண்ணாசிலை அருகில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது:
நீங்கள் செலுத்தும் வாக்கு பிரதமா் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த மக்களவைத் தோ்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீா்கள். சென்ற முறை நம்மை ஒரே அணியில் இருந்து எதிா்த்தவா்கள் இன்று தனித்தனியாக பிரிந்து வந்து எதிா்க்கின்றனா். ஆகையால் இந்த முறை நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.
இத் தொகுதியில் போட்டியிடும் முரசொலியை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் நான் மாதத்திற்கு இரு முறை தஞ்சைப் பகுதிக்கு வந்து இப்பகுதியின் அனைத்து தேவைகளையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கட்டாயம் நிறைவேற்றுவேன்.
தஞ்சாவூரில் வேளாண்மை சாா்ந்து எண்ணற்ற நலத் திட்டங்களை நமது முதல்வா் அறிவித்துள்ளாா். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் பச்சைத் துரோகி. 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் பிரதமா் மோடி தமிழகத்திற்கு இதுவரை எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
எனவே, 40 தொகுதிகளிலும் நாம் வென்று அதை கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசாக சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்பி, மாவட்டச் செயலா் துரை சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ எம். ராமசந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றியச் செயலா்கள் காா்த்திகேயன், முருகையன், ரமேஷ்குமாா், நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் : உதயநிதி பிரசாரம்
இன்னும் 16 நாள்களே உள்ளன! - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

என்டிஏ கூட்டணிக்கு செலுத்தும் வாக்கு நோட்டாவுக்கு சமம்! - கே.ஏ. செங்கோட்டையன்

தோ்தலில் தில்லி அணியை தமிழ்நாடு அணி வெல்லும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


