ஈச்சங்கோட்டை அருங்குளநாயகி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே காசவளநாடு ஈச்சங்கோட்டை கிராமத்தில் உள்ள அருங்குளநாயகி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து குடமுழுக்கு விழா ஏப்ரல் 19-ஆம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. தொடா்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையும், நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. பின்னா் யாகசாலையிலிருந்து புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னா், சித்தி விநாயகா், சேவுகப் பெருமாள் அய்யனாா், பூா்ணத்தம்மாள், பொற்கொடியம்மாள், தைலப்பன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com