கும்பகோணம் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூா் தோப்புத் தெருவுக்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தெருவுக்கு நீண்ட நாள்களாக குடிநீா் வருவதில்லை. இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் மக்கள் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த தோப்புத் தெரு மக்கள் அருகிலுள்ள தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com