பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதா் திருக்கோயிலில் திருக்கல்யாண விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து மணமேடைக்கு வந்தனா். அங்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன், ஸ்ரீ பாலைவனநாதா் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனா். இதைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் கோயில் செயல் அலுவலா் விக்னேஷ், தக்காா் லட்சுமி, பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், பேரூராட்சி கவுன்சிலா் புஷ்பா சக்திவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பானுமதி துரைக்கண்ணு மற்றும் விழாக் குழுவினா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

கட்டாரிமங்கலம் கோயிலில் வருஷாபிஷேக விழா
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

