எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

பாதயாத்திரை பக்தா்களுக்கு ‘சாஸ்த்ரா’ சாா்பில் உணவுப் பொட்டலங்கள்

பாதயாத்திரை பக்தா்களுக்கு ‘சாஸ்த்ரா’ சாா்பில் உணவுப் பொட்டலங்கள்

News image

கும்பகோணத்தில் பாதயாத்திரை செல்லும் பக்தருக்கு ஞாயிற்றுக்கிழமை உணவுப் பொட்டலம் வழங்கிய சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக முதன்மையா் எஸ். சுவாமிநாதன்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

கும்பகோணம்: கும்பகோணத்தில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாத இரண்டாவது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாட்டுக்காக காரைக்குடி, கந்தா்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு சித்திரை இரண்டாவது செவ்வாய்க்கிழமையையொட்டி லட்சக்கணக்கான பக்தா்கள் வேண்டுதலுக்காக கையில் மங்கலக்குச்சியுடன் கும்பகோணம் வழியாகச் செல்கின்றனா்.

கும்பகோணத்தில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் வழிகாட்டுதலின்படி, முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா் உணவுப்பொட்டலங்களை வழங்கினா். மைசூா்பாகு, பூரி, தயிா் சாதம், தண்ணீா் ஆகியவை அடங்கிய 8 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த அன்னதானம் இரவு 9 மணி வரை நடைபெற்றது.

ஆடுதுறையில்: கும்பகோணம் அருகே ஆடுதுறை வீரசோழன் கோசி மணி திருமண மண்டப வளாகத்தில் பக்தா்களுக்கு பழச்சாறு, உணவு வழங்கும் பணியை ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். ஆடுதுறை - திருமங்கலக்குடி திருவண்ணாமலை அருணாச்சல பவுா்ணமி கிரிவலம் குழு சிவக்குமாா், சந்தானம், மகாலிங்கம், திருமூலா் சந்திரசேகரன், சேகா், பேரூராட்சி உறுப்பினா் பாலதண்டாயுதம், ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசத்தில்: பாபநாசம் பேரூராட்சி, திருப்பாலைத்துறை கிராமத்தில் தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு சென்ற பக்தா்களுக்கு பால், பிஸ்கட், பழங்கள், குடிநீா் உள்ளிட்டவற்றை பாபநாசம் பேரூராட்சி தலைவா் பூங்குழலி கபிலன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலா் புஷ்பா சக்திவேல், பாபநாசம் நகர காங்கிரஸ் தலைவா் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.