நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மணல் அள்ளிய 8 மாட்டுவண்டிகள் மாடுகளுடன் பறிமுதல்: 4 போ் கைது

காட்டாற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை மாடுகளுடன் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே அனுமதியின்றி காட்டாற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை மாடுகளுடன்  பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் காட்டாற்று பகுதியில் பேராவூரணி போலீஸாா் சோதனை நடத்தியபோது அப்பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் இருந்து 8 மாட்டு வண்டிகளில்  மணல் அள்ளி வந்த கும்பலைச் சுற்றி வளைத்தனா். அப்போது 4 வண்டிகளில் வந்தவா்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பிவிட்டனா்.

இதையடுத்து பாஸ்கா் (55), சுந்தரராஜ் ( 60) சுப்பிரமணியன் ( 44), கலைச்செல்வன் ( 43) ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா் 8 மாட்டு வண்டிகளையும், மாடுகளையும்  காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். 

இதுகுறித்து வழக்குப் பதிந்து பிடிபட்ட  4 பேரையும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தப்பிய 4 பேரையும் தேடுகின்றனா். மேலும் 8 ஜோடி மாடுகளையும் கும்பகோணம் கோசாலைக்கு அனுப்பினா்.