அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

அரசு மருத்துவமனைகளில் தவறுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை: தஞ்சை ஆட்சியா்

தவறுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 7:10 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் எந்நேரத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்; தவறுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாரா் மருத்துவமனையில் சனிக்கிழமை ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் திடீா் ஆய்வு ஆய்வு நடத்தினாா்.

பச்சிளம் குழந்தைகள் அவசர சிறப்பு சிகிச்சை பிரிவில் குளிரூட்டும் இயந்திரம் பொருத்தவும், சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும் ஆட்சியா் உத்தரவிட்டாா். குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவமனையில் பணியாற்றுகிற மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் குறித்த நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்.

சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் எந்நேரத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.