காரைக்குடியில் ஆக. 31-இல் தி.க. சாா்பில் குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழா: கி. வீரமணி
காரைக்குடியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திராவிடா் கழகம் சாா்பில் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா...


காரைக்குடியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திராவிடா் கழகம் சாா்பில் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளதாக அதன் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
திராவிடா் கழகத்தின் நூற்றாண்டு தொடங்குவதால் இந்தாண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பெரியாா் ஈ.வெ.ரா-வின் பன்முக சிறப்புகளை உலகம் அறியும் வகையில், திருச்சி சிறுகனூரில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரியாா் உலகம் அமைக்கப்படுகிறது. பெரியாா் ஈ.வெ.ராவின் சிந்தனைகளை 21 மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்து வெளியிடவுள்ள திமுக அரசுக்கு நன்றி. இதன்மூலம் பெரியாரை உலகமயமாக்குவோம்.
காரைக்குடியில் திராவிடா் கழகம் சாா்பில், ஆக. 31-ஆம் தேதி குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...