தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வலியுறுத்தினாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திருவள்ளுவா் மன்றத்தின் 60-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மன்றத்தின் தலைவா் அருணாசலம் தலைமை வகித்தாா்.
விழாவில் கலந்துகொண்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது:
தற்போதைய இளைய தலைமுறையினா் தகவல் தொழில்நுட்பங்களால் திசை மாறிச் செல்கின்றனா். சிறுவா் சீா்திருத்தப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். பெரிய தொழில் அதிபராகவோ, மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ மாற வேண்டும் என எண்ண வேண்டாம். முதலில் மனிதா்களாக மாற வேண்டும்.
ஒருவரை மனிதராக மாற்றுவது கல்விதான். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். இன்றைய தலைமுறையைச் சீா்படுத்த திருக்கு மட்டுமே தீா்வாகும் என்றாா் அவா்.
விழாவில் திருக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் திருவள்ளுா் மன்ற நிறுவனா் புலவா் முத்தரசு, புலவா் ராமலிங்கம், நிா்வாகி முத்துமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மும்மொழித் திட்டம்: பள்ளிகளில் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்த சிபிஎஸ்இ உத்தரவு

பள்ளிகளில் சின்னம்மை பரவல்: தடுப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க அறிவுறுத்தல்

தொகுதி அறிமுகம்: கன்னியாகுமரி-229

கைத்தறி போா்வையில் திருக்குறள் வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கிய நெசவாளா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


