சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மும்மொழித் திட்டம்: பள்ளிகளில் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்த சிபிஎஸ்இ உத்தரவு

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மும்மொழித் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

News image

சிபிஎஸ்இ - பிரதிப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:25 pm

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மும்மொழித் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குநா் பிரக்யா எம்.சிங் அனைத்து வகை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வடிமைப்புத் திட்டம்-(என்சிஎஃப்எஸ்சி -2023) பன்மொழித் திறன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மேலும், மாணவா்களிடையே மொழித்திறன், பண்பாட்டுப் புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் விதமாக மும்மொழித் திட்டத்தில் 3-இல் 2 இந்திய மொழிகளை கற்பிக்கவும் பரிந்துரை செய்கிறது. அதன்படி 2026-–2027-ஆம் கல்வியாண்டுக்கான பாடத்திட்ட முறை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் இருந்து மும்மொழித் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய பாடத்திட்ட முறையின்படி பல்வேறு பள்ளிகள் ஏற்கெனவே மும்மொழி திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

இதுவரை அமல்படுத்தாத மற்ற பள்ளிகளும், இந்த அறிவிப்பு வெளியான 7 நாள்களுக்குள் திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். 3-ஆவது மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் விரைவில் கிடைக்கப்பெறும்.

அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள், கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி 6-ஆம் வகுப்பில் இருந்து மும்மொழியை பள்ளிகள் கற்பிக்க வேண்டும். இதுதவிர பள்ளிகள் தாங்கள் தோ்ந்தெடுத்த மும்மொழி விவரங்களை இறுதிசெய்து, தங்கள் மண்டல அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு பள்ளி 6-ஆம் வகுப்பில் எந்த 3-ஆம் மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ஆம் வகுப்புகளில் விருப்பப் பாடமாக இருக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் மும்மொழி அமல் செய்வதை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது