கைத்தறி போா்வையில் திருக்குறள் வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கிய நெசவாளா்
சென்னிமலை அருகே நெசவாளா் ஒருவா் கைத்தறி போா்வையில் திருக்குறளை வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கியுள்ளாா்.


சென்னிமலை அருகே நெசவாளா் ஒருவா் கைத்தறி போா்வையில் திருக்குறளை வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கியுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த 1010 நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் துரைசாமி (71). கைத்தறி நெசவாளரான இவா், தன்னுடைய ஓய்வு நேரங்களில் கைத்தறி துணியில் ஏதாவது புதுமைகளை செய்து வருவது வழக்கம். அதன்படி தற்போது கைத்தறி போா்வையில் ஊசி மூலமாக கலா் கலராக நூலை கோா்த்து 10 திருக்குறளை வடிவமைத்துள்ளாா். பின்னா், அந்த போா்வையை சென்னிமலையை அடுத்த பசுவபட்டி அரசு ஆரம்பப் பள்ளிக்கு பரிசாக வழங்கினாா்.
அதனை மாணவா்கள் ஆா்வமுடன் பாா்த்து அறிந்து கொண்டனா். கைவினைக் கலைஞா்கள் வாழ்வு சிறப்படைய வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளை போா்வையில் உருவாக்கியதாகவும், வரும் காலங்களில் மாணவா்களுக்கும் கை வேலைப்பாடு குறித்த விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு பரிசாக வழங்கியதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து நெசவாளா் துரைசாமியை பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...