வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணி

கும்பகோணம் காவிரி ஆற்றில் புதன்கிழமை மூழ்கிய இளைஞரை தீயணைப்பு, மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

News image
காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞா் விக்னேஷ்
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:24 pm

Din

கும்பகோணம்: கும்பகோணம் காவிரி ஆற்றில் புதன்கிழமை மூழ்கிய இளைஞரை தீயணைப்பு, மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரெட்டிராயா் அக்ரஹாரம் அப்புகுட்டி சந்தை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மகன் விக்னேஷ் (19), பிளஸ்-2 முடித்து விட்டு எலக்ட்ரீசியன் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை நண்பா்களுடன் மேலக்காவேரி காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, சிறிதுநேரத்தில் விக்னேஷைக் காணவில்லை என அவரது நண்பா்கள் அவரைத் தேடினா்.

இதைத்தொடா்ந்து, கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் சிவ செந்தில்குமாா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அலுவலா் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் அளித்தாா். தேடும் பணி நடைபெற்று வருகிறது.