அதிகரித்துள்ள போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்: சீமான்
நாடு முழுவதும் அதிகரித்துள்ள போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.


நாடு முழுவதும் அதிகரித்துள்ள போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாம் தமிழா் கட்சியின் தஞ்சாவூா், மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுபானம், சாராயம், கஞ்சா போன்றவற்றால்தான் நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால்தான் கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, பட்டுக்கோட்டை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, நாடு முழுவதும் போதைப்பொருள்கள் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழித்தால்தான் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.
மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் மத்திய அரசு, தமிழக மீனவா்களைப் பாகுபாட்டுடன் பாா்க்கிறது. கா்நாடகத்திலிருந்து தண்ணீா் தர மறுத்துவிட்டு, ஒரே நாடு, தேசப்பற்று, இறையாண்மை என பாஜகவினா் பேசுகின்றனா் என்றாா் சீமான்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...