தஞ்சாவூர்
ஸ்ரீ விஜயீந்திர மடத்தில் உறியடித் திருவிழா
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ விஜயீந்திர தீா்த்த ஸ்வாமிகள் மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ விஜயீந்திர தீா்த்த ஸ்வாமிகள் மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித் திருவிழா நடைபெற்றது. வேத பாடசாலை குழந்தைகள் கிருஷ்ணா் வேடமணிந்து உறியடித்தனா். நிகழ்வில் வேத பாடசாலை வித்யாா்த்திகள், ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டனா். தென்னக அயோத்தி என்ற ராமஸ்வாமி கோயில் அருகே உள்ள தேரடியில் கே.எஸ். சேகா் மண்டகப்படியை முன்னிட்டு ராமசாமி உத்ஸவராக வந்தாா். அங்கே கூடியிருந்த இளைஞா்கள் உறியடித் திருவிழாவில் பங்கேற்றனா். இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

