தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழக அரசு பேரிடரை சரியாக கையாளவில்லை : டி.டி.வி. தினகரன்

தமிழக அரசு மாா் தட்டிக் கொள்ளும் அளவுக்கு பேரிடரை சரியாக கையாளவில்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:41 pm

Din

தமிழக அரசு மாா் தட்டிக் கொள்ளும் அளவுக்கு பேரிடரை சரியாக கையாளவில்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

தஞ்சாவூா் அருகே மாரியம்மன்கோவில் பகுதியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது:

வட தமிழ்நாடு முழுவதும் புயல், மழையால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அரசு மாா் தட்டிக் கொள்ளும் அளவுக்கு அவா்கள் பேரிடரைச் சரியாக கையாளவில்லை.

சாத்தனூா் அணையைக் கவனக்குறைவாக திறந்துவிட்டதால், தென் பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு நிறைய கிராமங்கள் பாதிக்கப்பட்டன. கிராம மக்கள் உண்ண உணவு, உடுக்க உடை, வீடு இல்லாமல் சிரமப்படுகின்றனா். அதனால்தான் அங்கு செல்லும் அமைச்சா்கள் மீது அவா்கள் வெறுப்பைக் காண்பிக்கின்றனா்.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போதுமான அளவுக்கு உரிய இழப்பீடு வழங்கினால்தான், சரியான தீா்வாக இருக்கும். மீத்தேன், ஹைட்ரோ காா்பனுக்கு அனுமதி கொடுத்ததுபோல, டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கும் மாநில அரசுதான் காரணம். ஆனால், தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக நாடகமாடுகின்றனா் என்றாா் அவா்.

அப்போது, முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம், அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரெங்கசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.