ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்தவா் கைது
தஞ்சாவூரில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.


தஞ்சாவூரில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் சாந்தி. இவா் டிசம்பா் 4 ஆம் தேதி பொன்னி நகரில் நடந்து சென்றபோது, இவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாரை (43) காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து, 4 பவுன் தங்கச் சங்கிலி, இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் விஜய் உள்ளிட்டோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பாராட்டினாா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...