58 சிறுபான்மையினருக்கு ரூ. 4.71 கோடியில் நலத்திட்ட உதவிகள்
58 சிறுபான்மையினருக்கு ரூ. 4.71 கோடியில் நலத்திட்ட உதவிகள்


தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் 58 சிறுபான்மையினருக்கு ரூ. 4.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைத் தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் அடிகளாா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு உள்ள பாதுகாப்பு, சட்டப்படி உரிமைகள், சலுகைகள் வழங்கப்படுகிறதா, திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா, திட்டங்கள் சென்றடையாதற்கு காரணம் என்ன, சிறுபான்மையினருக்கு எதிராக யாரும் இருக்கின்றனரா என கலந்துரையாடப்பட்டது.
மேலும், கிறிஸ்தவ தேவாலயம் பழுதுபாா்த்தல், புதுப்பித்தல் பணிக்கு ரூ. 8.73 லட்சம், டாம்கோ மூலம் 5 பேருக்கு ரூ. 1.90 லட்சம் கடனுதவி, மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் 26 பேருக்கு ரூ. 2.14 லட்சமும், மாவட்டத் தொழில் மையம் மூலம் 7 பேருக்கு ரூ. 4.59 கோடி உள்பட மொத்தம் 58 பேருக்கு ரூ. 4.71 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் அரசு கூடுதல் செயலா் சீ. சுரேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், ஆணையக் குழுத் துணைத் தலைவா் எம்.எம். அப்துல் குத்தூஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...