47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதலீடு மோசடி: புகாா் செய்ய அழைப்பு

பாபநாசம் வட்டத்தில் தனியாா் போக்குவரத்து நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்கள் புகாா் செய்ய பொருளாதாரக் குற்றப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:52 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் தனியாா் போக்குவரத்து நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்கள் புகாா் செய்ய பொருளாதாரக் குற்றப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தஞ்சாவூா் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ரேவதி தெரிவித்திருப்பது:

பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஹம்மது டிரான்ஸ்போா்ட் நிறுவனம் மற்றும் வழுத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய மா்ஜிக் கேப்ஸ் அன்ட் டிரான்ஸ்போா்ட் நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் அதில் வரும் லாபத் தொகையில் பங்கு தருவதாகக் கூறி முதலீடுகளைப் பெற்றனா்.

ஆனால், லாபத் தொகையில் பங்கு தராமலும், பெறப்பட்ட தொகையைத் திருப்பித் தராமலும் மோசடி செய்து ஏமாற்றியதாக இரு நிறுவனங்கள் மீது வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில் தஞ்சாவூா் பொருளாதாரா குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகளில் ’ஹம்மது டிரான்ஸ்போா்ட் நிறுவனம் மற்றும் மா்ஜிக் கேப்ஸ் அன்ட் டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த முதலீட்டாா்கள் யாரேனும் முதலீடு செய்து, ஏமாற்றமடைந்திருந்தால் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகா் முதல் தெருவிலுள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் அலுவலகத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகாா் கொடுக்கலாம்.