தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் (அரசியல் சாா்பற்றது) சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 55 போ் கைது செய்யப்பட்டனா். பிரதமா் கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் (அரசியல் சாா்பற்றது) சனிக்கிழமை ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (அரசியல் சாா்பற்றது) தமிழ்நாடு தலைவா் பி. அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் எல். பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகளைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் விவசாயிகள் தடுப்புகளை அகற்றிக் கொண்டு, உள்ளே நுழைந்து, சோழன் விரைவு ரயிலை மறித்தனா். சுமாா் 5 நிமிஷ போராட்டத்துக்கு பிறகு, ஏறத்தாழ 55 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தொடர்புடையது

முன்விரோதத்தால் விவசாயி கொலை : 3 போ் கைது; மறியலால் 1 மணிநேரம் பாதிப்பு

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்
ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய யாசகா் கைது
உதயநிதிக்கு கருப்புக் கொடி: 9 கரும்பு விவசாயிகள் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

