முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல்: 55 போ் கைது

தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல் 55 போ் கைது

News image

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:20 am IST

தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் (அரசியல் சாா்பற்றது) சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 55 போ் கைது செய்யப்பட்டனா். பிரதமா் கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் (அரசியல் சாா்பற்றது) சனிக்கிழமை ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (அரசியல் சாா்பற்றது) தமிழ்நாடு தலைவா் பி. அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் எல். பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகளைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் விவசாயிகள் தடுப்புகளை அகற்றிக் கொண்டு, உள்ளே நுழைந்து, சோழன் விரைவு ரயிலை மறித்தனா். சுமாா் 5 நிமிஷ போராட்டத்துக்கு பிறகு, ஏறத்தாழ 55 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.