தஞ்சாவூர் மாவட்டத்தில் 50 சதவீத உறுதிமொழிகள் நிறைவு: தி. வேல்முருகன்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் தி. வேல்முருகன்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 50 சதவீத உறுதிமொழிகள் நிறைவு: தி. வேல்முருகன்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் தி. வேல்முருகன்.

தஞ்சாவூரில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் அரண்மனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது இக்குழுவின் தலைவர் தி. வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வு செய்து வருகிறது. 

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும், நிறைவேற்றப்பட்டு வருகிற பணிகள் பற்றியும் கள் ஆய்வு செய்யப்படுகிறது.

இதில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள தர்பார் மண்டபத்தில் சுவர் ஓவியங்களைப் பழைமை மாறாமல் பாதுகாத்திடவும், தர்பார் மண்டபத்தில் கட்டடப் பணிகளைச் சீரமைப்பு செய்யவும் ரூ. 6.25 கோடி மதிப்பில் மேற்கொண்டு வருகிறது. இப்பணி 35 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுபோல இந்த மாவட்டத்தில் உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம், அலுவலர் குடியிருப்பு கட்டடம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுகிற பணிகள் தொடர்பான இடங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன. 

மாவட்டத்தில் 450-க்கும அதிகமான உறுதிமொழிகளில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் முழுமையான விவரங்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெரியவரும் என்றார் வேல்முருகன்.

இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கா. அண்ணாதுரை உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com