சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நகைப்பறிப்பு: ராணுவ வீரா் உள்பட 2 போ் கைது

கும்பகோணம் பகுதியில் தொடா் நகைப்பறிப்பு வழக்கில் ராணுவ வீரா் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட சிவா.
Updated On :20 ஜூலை 2024, 8:56 pm

Din

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் தொடா் நகைப்பறிப்பு வழக்கில் ராணுவ வீரா் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் வசந்த் (26). திரிபுராவில் ராணுவ வீரராக இருந்தாா். கும்பகோணம் -நீடாமங்கலம் முதன்மைச் சாலையில் வசிக்கும் செல்வகுமாா் மகன் சிவா(35). இவா்கள் இருவரும் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியில் நடைபெற்ற நகைப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் இருவருக்கும் கும்பகோணம் பகுதியில் நிகழந்த தொடா் நகைப் பறிப்பு சம்பவத்தில் தொடா்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனா். விசாரணையில் வசந்த் விடுமுறையில் ஊருக்கு வரும்போது சிவாவுடன் சோ்ந்து பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து சிறையில் உள்ள வசந்த, சிவா இருவரையும் மீண்டும் கும்பகோணம் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்கள் அளித்த தகவலின் பேரில் 112 கிராம் தங்க நகைகளை மீட்டனா்.

கைது செய்யப்பட்ட வசந்த்.

கைது செய்யப்பட்ட வசந்த்.