முன்னாள் ராணுவ வீரா் தற்கொலை

கருங்கல் அருகே எட்டணிவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை
Published on

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே எட்டணிவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

எட்டணிவிளை பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் பால்ராஜ் (47). இவரது மனைவி, குழந்தைகள் கடந்த 3 ஆண்டுகளாக இவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனராம். இதனால், மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Dinamani
www.dinamani.com